போதைப்பொருளுடன் ஒருவரை கடலோர பாதுகாப்பு படையினர் கைது

ஜூலை 13, 2022

பேருவளை கரையோர பாதுகாப்பு நிலையத்தின் படையினரும் மற்றும் பொலிசாரும் இணைந்து கடந்த 12 ஆம் திகதி (ஜூலை) பேருவளை மீன்பிடித்துறைமுகத்தில் வைத்து ஹெரோயின் போதைப்பொருள் வைத்திருந்த ஒருவரைக் கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர் வசம் 440 மில்லி கிராம் ஹெராயின் (17 சிறிய பாக்கெட்டுகள்) மற்றும் ரூ. 12,000.00 பணமும் இருந்துள்ளது. பயாகலை பிரதேசத்தைச் சேர்ந்த 42 வயதான சந்தேக நபர், பிரதேச மீனவர்களுக்கு போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்டு வந்துள்ளார் என தெரியவந்துள்ளது.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர், கைப்பற்றப்பட்ட ஹெரோயின் போதைப்பொருள் மற்றும் பணம் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக பேருவளை போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டததாக கடலோர பாதுகாப்பு படையினர் தெரிவித்துள்ளனர்.

Courtesy - https://coastguard.gov.lk