பாராளுமன்ற வளாகத்திற்கு அருகில் காயமடைந்த இராணுவ வீரர்களை
பாதுகாப்பு செயலாளர் நேரில் சென்று நலம் விசாரிப்பு

ஜூலை 15, 2022

பாதுகாப்புச் செயலாளர் ஜெனரல் கமல் குணரத்ன இன்று (ஜூலை 15) காலை கொழும்பு இராணுவ வைத்தியசாலைக்கு விஜயம் செய்தார். இதன்போது அவர் புதன்கிழமையன்று பாராளுமன்ற வளாகத்திற்கு அருகாமையில் கடமையாற்றும் போது ஆர்ப்பாட்டக்காரர்களின் மிலேச்சத்தனமான தாக்குதலினால் பலத்த காயங்களுக்குள்ளான படை வீரர்களை சந்தித்து அவர்களிடம் நலம் விசாரித்தார்.

மேலும், இந்த விஜயத்தின் போது ஜெனரல் குணரத்ன வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வரும் இராணுவத்தினருடன் கருத்துக்களை பரிமாரிக்கொண்டார்.

இந்த நிகழ்வில் இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் விக்கும் லியனகே, பாதுகாப்பு அமைச்சின் இராணுவ இணைப்பு அதிகாரி மேஜர் ஜெனரல் தினேஷ் நாணயக்கார, இராணுவ சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் பிரிகேடியர் கிறிசாந்த பெர்னாண்டோ மற்றும் சிரேஷ்ட அதிகாரிகள் ஆகியோர் கலந்துகொண்டனர்.