வடக்கு கடற்பரப்பில் கடற்படையினரால் கஞ்சா மீட்பு

ஜூலை 19, 2022

கச்சத்தீவு கடற்பரப்பில் மிதந்து கொண்டிருந்த சுமார் 30 கிலோ கஞ்சாவை இலங்கை கடற்படையினர் நேற்று (ஜூலை 18) விசேட நடவடிக்கையின் போது கைப்பற்றினர்.

கச்சத்தீவுக்கு அருகாமையில் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்த மீன்பிடி இழுவை படகுகளை துரத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த வேலை, ஒன்பது பொதிகளில் இருந்த கஞ்சாவும் மீட்டதாக கடற்படை தெரிவித்துள்ளது.

கடல் பிரதேசத்தில் கடற்படையினரின் நடவடிக்கைகளை அவதானித்த கடத்தல்காரர்களினால் இப்போதைப்பொருள் பொதிகளை கடலில் கைவிட்டு சென்றிருக்கலாம் என கடற்படை சந்தேகிக்கிறது.

கைப்பற்றப்பட்ட கஞ்சா போதைப்பொருளின் மொத்த வீதி மதிப்பு சுமார் ரூ. 9 மில்லியன் எனவும், மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக உரிய சட்ட அமலாக்கள் பிரிவினரிடம் இப்போதைப்பொருள் கையளிக்கப்படும் என கடற்படை மேலும் தெரிவிக்கிறது.