வெள்ளவாய பிரதேசத்தில் ஏட்பட்ட காட்டுத்தீயை அணைக்க இராணுவம் உதவி

ஜூலை 19, 2022

அண்மையில் வெல்லவாய, மஹகொட யாய தேவகிரி மலைத்தொடரில் ஏட்பட்ட காட்டுத்தீயை அணைக்க அங்குள்ள இராணுவத்தினர் உதவினர்.

சம்பவ இடத்திற்கு விரைந்த இலங்கை இராணுவத்தின் 121 படைப்பிரிவு படையினர் காட்டுத்தீயை கட்டுப்பாட்டிற்கு கொண்டு வந்ததுடன் அண்டிய காட்டுப் பகுதிகளுக்கு தீ பரவாமல் தடுத்து பாரிய அநர்த்தமொன்றை தவிர்க்க நடவடிக்கை எடுத்தனர்.

12 ஆவது படைப் பிரிவின் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் லங்கா அமரபால அவர்களின் கண்காணிப்பின் கீழ் இந்நடவடிக்கை மேட்கொள்ளப்பட்டதாக இராணுவம் மேலும் தெரிவித்துள்ளது.