ஜெனரல் கமல் குணரத்ன பாதுகாப்புச் செயலாளராக மீண்டும் நியமனம்

ஜூலை 22, 2022

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, தனக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களுக்கு அமைய  பல அமைச்சுகளுக்கான புதிய செயலாளர்களை நியமித்துள்ளார். 2022 ஜூலை 22 ஆம் திகதி அதாவது இன்று முதல் அமுலுக்கு வரும் வகையில் இந்த நியமனங்கள் வழங்கப்படுள்ளன.

இதற்கமைய, பாதுகாப்பு அமைச்சின் செயலாளராக ஜெனரல் கமல் குணரத்ன மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளார்.

சிறந்த இராணுவ வரலாற்று பின்னணியைக் கொண்ட ஜெனரல் குணரத்ன மனிதாபிமான நடவடிக்கையின் இறுதிக்கட்டத்தின்  போது 53 ஆவது படைப் பிரிவிற்கு தலைமை தாங்கினார். இவர் இலங்கையின் போர் வரலாறு உட்பட பல புத்தகங்கள் எழுதியுள்ளமை குறிப்பிடத்தக்கது.