கடற்படையினால் அனுராதபுரத்தில் நீர் சுத்திகரிப்பு நிலையம் அமைப்பு

ஜூலை 25, 2022

இலங்கை கடற்படையினால் நிர்மாணிக்கப்பட்ட நீர் சுத்திகரிப்பு நிலையம் அண்மையில் அனுராதபுரம் பலுகஸ்வெவ மைத்திரிகமவில் மக்களின் பாவனைக்காக திறந்து வைக்கப்பட்டது.

கடற்படை சமூகப் பொறுப்புணர்வுத் திட்டத்தின் ஒரு அங்கமாக அமைக்கப்பட்ட இந்நீர் சுத்திகரிப்பு நிலையத்தின் மூலம், பிரதேச மக்களின் நீண்டகாலத் தேவையை நிறைவேற்றும் வகையில் சுமார் 600 குடும்பங்களுக்கு பாதுகாப்பான குடிநீரை வழங்க முடியும் என கடற்படை தெரிவித்துள்ளது.

சுகாதார அமைச்சின் ஆதரவுடன் கடற்படையின் மனிதவளம் மற்றும் தொழில்துறை நிபுணத்துவம் மூலம் இந்த நீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.