கொழும்பு காக்கைதீவு கடற்கரை பிரதேசம் கடற்படையினரால் சுத்தம் செய்யப்பட்டது

ஜூலை 26, 2022

இலங்கை கடற்படையினர் அண்மையில் கொழும்பு, மட்டக்குளியில் உள்ள காக்கைதீவு கடற்கரையை சுத்தம் செய்தனர்.

கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் நிஷாந்த உலுகெதென்னவின் வழிகாட்டுதலின் பேரில், கடலில் சேரும் பிளாஸ்டிக் மற்றும் பொலித்தீன் கழிவுகளைக் குறைப்பதற்கும், மனித வாழ்க்கைக்கு சூழல் பாதுகாப்பின் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கும் இத்தகைய சுத்தம் செய்யும் நிகழ்ச்சிகளை கடற்படை வழமையாக ஏற்பாடு செய்து வருவதாக கடற்படை தெரிவிக்கின்றது.

கடற்படையின் சயூரல கப்பலின் 5ஆம் ஆண்டு நிறைவையிற்று நடத்தப்பட்ட இந்நிகழ்வில் ஆக்கப்பலின் அதிகாரிகள் உட்பட அனைத்து பணியாளர்களும் கலந்துக்கொண்டதாக கடற்படை மேலும் தெரிவிக்கிறது.