கிளிநொச்சியில் இலங்கை இராணுவத்தினர் இரத்த தானம்

ஜூலை 29, 2022

கிளிநொச்சி வைத்தியசாலை அதிகாரிகளின் வேண்டுகோளுக்கிணங்க, கிளிநொச்சி பிரதேச நோயாளர்களின் அவசர இரத்த தேவைகளை பூர்த்தி செய்யும் நோக்கில் இலங்கை இராணுவப் படையினர் அண்மையில் இரத்த தானம் செய்தனர்.

இதன்போது  1ஆம் படைத் தலைமையகம் மற்றும் அதனுடன் இணைந்த வழங்கல் பிரிவுகள், 57ஆம் பிரிவு, 66ஆம் பிரிவு, 4ஆம் இராணுவ புலனாய்வுப் படை, 5வது இலங்கை கவசப் படையின் B படைப்பிரிவுகளைச்  சேர்ந்த  155 இராணுவ அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள் மற்றும் கிளிநொச்சி பொலிஸார் சிலரும் இரத்ததானம் செய்ததாக இராணுவம் தெரிவித்துள்ளது.