இராணுவத்தினரின் ஒருங்கிணைப்பில் கிழக்கில் தேவையுடையோருக்கு உலருணவு பொதிகள் வழங்கி வைப்பு

ஜூலை 29, 2022

கிழக்கு பிராந்தியத்தின் தொப்பிகளை, கிளிவெட்டி, கிரில்லாவெளி வெலிகந்தை, சிங்ஹபுர, செவனப்பிட்டிய மற்றும் கட்டுவன்விளை ஆகிய பகுதிகளில் வதியும் 200 தேவையுடைய குடும்பங்களுக்கு ஒவ்வொன்றும் ரூபா 5000/= பெறுமதியான உலர் உணவுப் பொதிகள் இலங்கை இராணுவத்தினால் அண்மையில் வழங்கி வைக்கப்பட்டது.

கிழக்கு (SFHQ- கிழக்கு) பாதுகாப்புப் படைத் தளபதி மேஜர் ஜெனரல் பிரியந்த ஜயவர்தன அவர்களின் வேண்டுகோளுக்கிணங்க கம்பஹாவைச் சேர்ந்த திரு பிரசாத் லொகுபாலசூரிய அவர்கள் இதற்கு அனுசரணை வழங்கியதாக இராணுவம் தெரிவித்துள்ளது.