--> -->

தவளம்தென்னயில் நிலச்சரிவினால் தடைப்பட்ட போக்குவரத்து இராணுவத்தின் முயற்சியால் வழமைக்கு

ஆகஸ்ட் 02, 2022

• மீனவர்களுக்கு வளிமண்டலவியல் திணைக்களத்தினால் எச்சரிக்கை விடுப்பு

58 படைப்பிரிவின் கீழுள்ள 581 பிரிவின் 1 வது படைப்பிரிவின் 5 ஆவது விஜயபாகு காலாட்படை படையினர் நேற்று (1) மாலை சீரற்ற காலநிலையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிகளை வழங்கினர்.

கொத்மலை புதிய நகருக்கு அண்மித்த மாகந்துரை, தவளம்தென்ன பிரதேசத்தில் ரன்வந்தென்ன என்ற இடத்தில் ஏற்பட்ட மண்சரிவினால் பாதிக்கப்பட்ட 120க்கும் மேற்பட்ட மக்களுக்கு இராணுவம் உதவியது.

மண்மேடுகள் விழுந்து போக்குவரத்து தடைப்பட்டிருந்த பாதையிலிருந்து  மண்ணை அகற்றி மக்களின் போக்குவரத்தை சீர்செய்ய இராணுவத்தினர் நடவடிக்கை எடுத்தனர்.  

இதற்கிடையில், தென்மேற்கு பருவமழை வலுவடைந்து வருவதால், மேற்கு மற்றும் தெற்கு கடற்பரப்பில் மற்றும், நாட்டின்  தென்மேற்கு பகுதியிலும் மழை மற்றும் காற்றுடன் கூடிய நிலை தொடரும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

புத்தளத்திலிருந்து கொழும்பு, காலி மற்றும் அம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கடற்பரப்புகளில் கடல் அலைகள் சுமார் 3.0 – 3.5 மீ ற்கு அதிகரிக்கும் சாத்தியம் காணப்படுவதாகக் குறிப்பிட்ட வளிமண்டலவியல் திணைக்களம் மறு அறிவித்தல் வரை அப்பகுதிகளில் மீனவர்கள் மீன்பிடி நடவடிக்கைகளின் ஈடுபடுவதை தவிர்க்குமாறு எச்சரித்துள்ளது.