கடற்படையினால் சட்டவிரோத குடியகல்வு முயட்சி முறியடிப்பு
ஆகஸ்ட் 02, 2022இலங்கை கடற்படை மற்றும் வென்னப்புவை பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட விசேட நடவடிக்கையின் போது வென்னப்புவையிருந்து கடல் மார்க்கமாக வெளிநாட்டிற்கு சட்டவிரோத குடியகல்வு முயற்சியில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் 47 பேர் அண்மையில் (31) கைது செய்யப்பட்டனர்.
வென்னப்புவை பிரதேசத்தில் சந்தேகத்திற்கிடமான மூன்று வாகனங்களை சோதனையிட்டதை அடுத்து சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்னர். இந்த சட்டவிரோத குடியகல்வு முயற்சியில் ஈடுபட்ட வாகனங்களுடன் 37 ஆண்கள், ஆறு பெண்கள் மற்றும் நான்கு இளைஞர்கள் கைது செய்யப்பட்டதாக கடற்படை தெரிவித்துள்ளது.
இலங்கை கடற்படையினருக்கு கிடைத்த தகவலையடுத்து மேட்கொள்ளப்பட்ட இந்த சுற்றிவளைப்பின் போது யாழ்ப்பாணம், வவுனியா, திருகோணமலை, கல்முனை, மட்டக்களப்பு, புத்தளம், சிலாபம், மாரவில, மஹாவெவை, முந்தல் மற்றும் வெள்ளவத்தை ஆகிய பகுதிகளை சேர்ந்தவர்கள் என அடையாளம் காணப்பட்ட சந்தேகநபர்கள் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக வென்னப்புவை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர் என கடற்படை தகவல்கள் தெரிவிக்கின்றன.
பணம் சம்பாதிக்கும் நோக்குடன் இவ்வாறான சட்டவிரோத குடியகல்வு மோசடிகளில் ஈடுபடுபவர்களிடம் சிக்கி உயிரைப் பணயம் வைத்து ஆபத்தான கடல் பயணங்களில் ஈடுபடுவததை தவிக்குமாறு பொதுமக்கள் வேண்டப்படுகிறார்கள்.