“பொதுநலவாய விளையாட்டுகள் 2022” போட்டிகளில் இலங்கை பாதுக்காப்பு படை விளையாட்டு வீரர்கள் திறமை

ஆகஸ்ட் 03, 2022

ஐக்கிய இராச்சியத்தின் பர்மிங்ஹாம் நகரில் நேற்று (ஆகஸ்ட் 02) நடைபெற்ற “காமன்வெல்த் விளையாட்டு 2022” போட்டிகளில் பெண்களுக்கான 800 மீ ஓட்டப்`போட்டியில் இலங்கை கடற்படையின் பெண் சிறு அதிகாரி கயந்திகா அபேரத்ன இலங்கை சாதனையை முறியடித்துள்ளார்.

போட்டியை 2 நிமிடம் 01.20 வினாடிகளில் ஓடி முடித்து தனது சொந்த முந்தைய தேசிய சாதனையான 2 நிமிடம் 01.44 முறியடித்தார் என்று கடற்படை தெரிவித்துள்ளது. அவர் 800 மீ, 1500 மீ மற்றும் 5000 மீ போட்டிகளிளும் தேசிய சாதனைகளை படைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, இலங்கை இராணுவ பொது சேவை படையின் இராணுவ பாரம்தூக்கும் வீரர், கோப்ரல் Y.D.I குமார, ‘காமன்வெல்த் விளையாட்டு 2022’ போட்டிகளில் 55 கிலோ பிரிவில் வெண்கலப் பதக்கத்தை வென்றுள்ளார்.

Tamil