அமைச்சின் புதிய மேலதிக செயலாளர் - பாராளுமன்ற விவகாரங்கள், கொள்கை மற்றும் திட்டமிடல் நியமனம்

ஆகஸ்ட் 03, 2022

திருமதி இந்திகா விஜேகுணவர்தன இன்று (ஆகஸ்ட் 03) முதல் பாதுகாப்பு அமைச்சின் பாராளுமன்ற விவகாரங்கள், கொள்கை மற்றும் திட்டமிடல் மேலதிக செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

பாதுகாப்புச் செயலாளர் ஜெனரல் கமல் குணரத்னவிடமிருந்து திருமதி விஜேகுணவர்தன தனது நியமனக் கடிதத்தைப் அமைச்சில் வைத்து இன்று பெற்றுக்கொண்டார்.

இலங்கை நிர்வாக சேவையின் விசேட தர அதிகாரியான இவர் இதற்கு முன் ஒரு ஜனாதிபதி மேலதிக செயலாளராகவும் சேவையாற்றியுளார்.

இவர் தனது 22 வருட சேவை காலத்தில் காணி அமைச்சின் காணி ஆணையாளர் உட்பட பல பதவிகளில் சேவையாற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதற்கு முன் பாதுகாப்பு அமைச்சின் பாராளுமன்ற விவகாரங்கள், கொள்கை மற்றும் திட்டமிடல் மேலதிக செயலாளர் பதவி வகித்த திரு. ஆர்.எம்.பி.எஸ்.ரத்நாயக்க, ஆகஸ்ட் 01 முதல் மேலதிக செயலாளர்- பாதுகாப்பு பதவிக்கு நியமிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.