புது டில்லியில் இலங்கை மற்றும் இந்திய கடலோர பாதுகாப்புப்படைகளின் உயர்மட்ட கலந்துரையாடல்
ஆகஸ்ட் 27, 2019அண்மையில் இலங்கை மற்றும் இந்திய கடலோர பாதுகாப்புப் படைகளுகிடையிலான நான்காவது வருடாந்த உயர்மட்ட கலந்துரையாடல் ஒன்று இந்தியாவில் இடம்பெற்றுள்ளது. இந்நிகழ்வு, புது டில்லியில் உள்ள இந்திய கடலோர பாதுகாப்புப்படை தலைமையகத்தில் (ஆகஸ்ட், 20) இடம்பெற்றதாக கடலோர பாதுகாப்பு படை தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்நிகழ்வில், இந்திய கடலோர பாதுகாப்பு படை பிரதானியும் பணிப்பாளர் நாயகமுமான கே நடராஜன் அவர்கள் இந்திய குழுவினருக்கு தலைமை வகித்த அதேவேளை, இலங்கை கடலோர பாதுகாப்பு படையின் பணிப்பாளர் நாயகம், ரியர் அட்மிரல் ஜீடிஏஎஸ் விமலதுங்க அவர்கள் இலங்கை குழுவினருக்கு தலைமை வகித்தார்.
இக்கலந்துரையாடளின்போது, தகவல் பரிமாற்றம், இருதரப்பு மற்றும் கூட்டு பயிற்சிகளில் பங்கேற்பது உள்ளிட்ட மீன்பிடி நடவடிக்கைகள், பாதுகாப்பு, திறன் மேம்பாடு, ஒத்துழைப்பு ஆகிய பல்வேறு பிரச்சினைகள் தொடர்பாக ஆராயப்பட்டன.
இதன்போது, இருதரப்பினரும் “கடல் பிராந்தியத்தில் நாடுகடந்த சட்டவிரோத நடவடிக்கைகளை எதிர்த்துப் போராடுவதற்கான கூட்டுறவை நிறுவுதல் மற்றும் பிராந்திய ஒத்துழைப்பை மேம்படுத்தல் ஆகிய புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டனர்.