ஜின் கங்கையில் அடைக்கப்பட்ட குப்பைகளை இலங்கை கடற்படை அகற்றியது

ஆகஸ்ட் 05, 2022

இலங்கை கடற்படை அண்மையில் (ஆகஸ்ட் 03) ஆற்றின் நீரோட்டத்தை சீராக வைத்திருக்க ஜின் கங்கையின் அகலிய மற்றும் தொடங்கொட பாலத்தின் கீழ் அடைபட்டிருந்த குப்பைகளை நடவடிக்கை எடுத்தது.

தொடர்ச்சியாக பெய்துவரும் அடைமழை காரணமாக ஆற்றின் நீரோட்டம் அதிகரித்துள்ளதோடு அடித்த்து வரப்பட்ட குப்பை கூலங்கள் பாலங்கள் அடியின் சிக்குண்டு நீரோட்டம் தடைப்பட்டு சுற்றியுள்ள தாழ்வான பகுதிகளுக்கு வெள்ள அபாயத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதனைத் தொடர்ந்து தெற்கு கடற்படை கட்டளையின் சுழியோடிகள் குழுவினரின் உதவியோடு தடைகளை நீக்கி ஆற்றின் நீரோட்டத்தை சீர் செய்ய கடற்படை உடனடி நடவடிக்கை எடுத்தது.

மழைக்காலங்களில் ஜிந்தோட்டையில் இருந்து கடலில் கலக்கும் ஜின் கங்கையின் வக்வெல்ல, அகலிய மற்றும் தொடங்கொட பாலங்களின் கீழ் அடைப்பட்டு கிடக்கும் தடைகளை அகற்ற கடற்படை வழமையாக நடவடிக்கை எடுத்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.