இராணுவ தலைமையகத்திற்கு ஜனாதிபதியின் முதல் விஜயத்தில் இராணுவ மரியாதையுடன் செங்கம்பள வரவேற்பு

ஆகஸ்ட் 10, 2022

இலங்கையின் 8 வது நிறைவேற்று ஜனாதிபதியாக பதவியேற்ற பின்னர் இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே அவர்களின் அழைப்பின் பேரில் முப்படைகளி்ன் சேனாதிபதியான ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தனது முதல் விஜயத்தை செவ்வாய்க்கிழமை (9) ஸ்ரீ ஜயவர்தனபுர இராணுவத் தலைமையகத்திற்குச் மேற்கொண்ட போது அவர்களுக்கு செங்கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது.

பாதுகாப்பு அமைச்சின் கட்டிடத்திற்கு முன்னால் காலை 9.00 மணியளவில் முப்படைகளி்ன் சேனாதிபதி மற்றும் ஜனாதிபதி வாகன அணிவகுப்பிற்கு இராணுவத் தலைமையகத்தின் பிரதான நுழைவாயிலில் பாதுகாவலர் பாதுகாப்பு அறிக்கிடையி்ல் மரியாதை வழங்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து, மண்டபத்தில் இருந்த இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே அவர்கள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை அணிவகுப்புச் சதுக்கத்திற்கு அழைத்துச் சென்று மரியாதை செலுத்துவதற்கு முன்பு அவரை அன்புடன் வரவேற்றார்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அவர்களின் வருகைக்கு முன்னர், கௌரவ பிரதமர் தினேஷ் குணவர்தன, கௌரவ சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன, கௌரவ பொது பாதுகாப்பு அமைச்சர் கௌரவ திரன் அலஸ், பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஜெனரல் (ஓய்வு) கமல் குணரத்ன, ஜனாதிபதி அலுவல்கள் பிரதானி மற்றும் தேசிய பாதுகாப்பிற்கான ஜனாதிபதி ஆலோசகர் திரு சாகல ரத்நாயக்க, பாதுகாப்பு பதவி நிலை பிரதானி ஜெனரல் ஷவேந்திர சில்வா, இராணுவ பதவி நிலை பிரதானி, பிரதி இராணுவ பதவி நிலை பிரதானி மற்றும் பல சிரேஷ்ட அதிகாரிகள் ஜனாதிபதியை வரவேற்க அங்கு வந்திருந்தனர்.கஜபா படையணியின் படையினரின் வண்ணமயமான மற்றும் நேர்த்தியான சீருடையிலான இராணுவத்தின் சிறப்பு அணிவகுப்பினை அணிவகுப்புத் கட்டளையாளரின் வேண்டுகோளுக்கு இணங்க பரிசீலனை செய்த பின்னர் அன்றைய பிரதம அதிதியான ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அவர்களுக்கு இராணுவ மரபுகளுக்கு அமைய பாதுகாப்பு மரியாதை வழங்கப்பட்டது. 04 அதிகாரிகள், 100 சிப்பாய்கள் மற்றும் ஜனாதிபதி வர்ணம் மற்றும் படையணி வர்ண அணிகளுடன் கூடிய மிக உயர்ந்த இராணுவ மரியாதையினை ஜனாதிபதி மதிப்பாய்வு செய்தார்.

இராணுவ தலைமையகத்தின் பிரதான நுழைவாயிலில், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அவர்களுக்கு இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே அவர்களினால் இராணுவத் தலைமையகத்தின் பிரதான பணிநிலை அதிகாரிகளை அறிமுகம் செய்து வைத்தார். இராணுவ தளபதியின் அலுவலகத்திக்கு வருகை தந்திருந்த முப்படைகளின் சேனாதிபதியும் இராணுவத் தளபதியும் லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே இருவரும் சுருக்கமான கருத்துக்களை பரிமாறிக் கொண்டனர். இச் சந்திப்பில் "இலங்கை இராணுவத்தின் முக்கியக் கோட்பாடுகள்; கட்டளைகள், நடவடிக்கைகள், போர் மற்றும் வாழ்வாதாரம் ஆகியவற்றின் முதல் பதிப்புகளை வருகை தந்த சேனாதிபதிக்கு வழங்குவதற்கான வாய்ப்பையும் இராணுவத் தளபதி பயன்படுத்திக் கொண்டார்.

இவ் விஜயத்திக்கு அதிக முக்கியத்துவம் அளித்து சில வாரங்களுக்கு முன்னர் இலங்கையின் ஜனநாயகம் மற்றும் இறையாண்மையின் உச்சமாக கருதப்படும் பாராளுமன்ற வளாகத்தை ஒரு வன்முறை கும்பல் தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர கடுமையாக முயற்சித்த போது அந்த துரதிஷ்டமான நாளில் தமது கடமைகளைச் செய்த இராணுவத் படையினரின் பிரதிநிதிக் குழுவை ஜனாதிபதி அவர்கள் பாராட்டும் வகையில் சந்திக்க மறக்கவில்லை. வன்முறையாளர்கள் உள்ளே நுழைவதைத் தடுக்க முற்பட்ட போது கடமையில் ஈடுபட்டிருந்த இராணுவ சிப்பாய்கள் காயமடைந்தமையால் அவர்களில் சிலர் அவசர சிகிச்சைக்காக வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டனர்.வரவேற்பு உரைக்கு பின்னர் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அவர்கள், தமது உயிரைப் பணயம் வைத்து உரிய நேரத்தில் தலையீடு செய்ததை பாராட்டியதுடன், அந்த வீர இராணுவ வீரர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கிய அவர், "அன்றைய தினம் உங்களது செயற்பாடுகள் நாட்டின் அரசியலமைப்பு, ஜனநாயகம் மற்றும் இறையாண்மையைப் பாதுகாத்தன. " என குறிப்பிட்டு உரையாற்றினார்.

லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே அவர்கள் படையினருக்கு பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்கும் நிகழ்வின் இறுதியில், வருகை தந்திருந்த முப்படை சேனாதிபதிக்கு இராணுவத்தின் அனைவர் சார்பாக விசேட நினைவுச் சின்னம் ஒன்றை வழங்கி தனது அமைப்பின் நன்றியை வெளிப்படுத்தினார்.நாட்டின் 8 வது நிறைவேற்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, இராணுவத் தலைமையகத்தில் இராணுவத் தலைமையகத்தில் உள்ள சிரேஷ்ட அதிகாரிகளுடன் இரண்டு குழு புகைப்படங்களில் தோன்றுவதற்கு முன்னர் விருந்தினர் பதிவேட்டு புத்தகத்தில் பாராட்டுக் குறிப்பையும் பதிவு செய்தார்.

நன்றி - www.army.lk