நல்லதண்ணி – மஸ்கெலியா வீதியை இராணுவத்தினர் சுத்தம் செய்தனர்

ஆகஸ்ட் 10, 2022

அண்மையில் பெய்த அடை மழையை அடுத்து நல்லதண்ணி - மஸ்கெலியா பிரதான வீதியில் பொது மக்கள் மற்றும் வாகன போக்குவரத்துக்கு இடையூறாக இருந்த மண் மேட்டை இலங்கை இராணுவப் படையினர் அகற்றி போக்குவரத்தை சீர்செய்ய நடவடிக்கை எடுத்தனர்.

நகர அபிவிருத்தி அதிகாரசபை ஊழியர்களின் உதவியுடன் 112 படையணியின் 19 இலங்கை தேசிய பாதுகாப்பு படையினர் சில மணி நேரத்தில் இப்பணியை மேற்கொண்டதாக இராணுவ வட்டாரங்கள் தெரிவித்தன.