பாக்கிஸ்தான் கடற்படை கப்பல் கொழும்பு வருகை

ஆகஸ்ட் 12, 2022

உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு கொழும்பு துறைமுகத்திற்கு இன்று (ஆகஸ்ட் 12) வருகை தந்த பாகிஸ்தான் கடற்படைக் கப்பல் தைமூர், இலங்கை கடற்படையினால் கடற்படை சம்பிரதாய முறைப்படி வரவேற்கப்பட்டது.

134 மீ நீளம் மற்றும் 169 கடற்படை பணியாளர்களுடன் வருகை தந்திருக்கும் தைமூர் ஆகஸ்ட் 15 ஆம் தேதி வரை இலங்கையில் தங்கியிருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இக்காலப்பகுதியில் இரு நாட்டு கடற்படைகளுக்குமிடையே ஒத்துழைப்பு மற்றும் நல்லுறவை மேம்படுத்தும் நோக்கில் பல நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்திருப்பதாக இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது.

மேலும், தைமூர், இலங்கை கடற்படையுடன் இணைந்து மேற்கு பிராந்திய கடல் பகுதியில் கடற்படை பயிற்சியை நடத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது என்று இலங்கை கடற்படை மேலும் தெரிவித்துள்ளது.