கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் கணனி கற்கைகள் பீடத்தின் புதிய சஞ்சிகை வெளியீடு

ஆகஸ்ட் 18, 2022

கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் கணனி கற்கைகள் பீடம் அதன் கணனியறிவு தொடர்பான சர்வதேச சஞ்சிகையின் (IJRC) தொகுதி 01ன், இதழ் 02 ஐ சமீபத்தில் வெளியிட்டது.

கணனி கற்கை பீடத்தின் பீடாதிபதி கலாநிதி ஏ டி ஏ ஐ குணசேகர சஞ்சிகையின் முதல் பிரதியை கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் மேஜர் ஜெனரல் மிலிந்த பீரிஸிடம் அண்மையில் கையளித்தார்.

இச்சஞ்சிகை கணனி` மற்றும் தொடர்புடைய அதிநவீன தொழிநுட்பங்களில் சமீபத்திய அறிவைப் பங்கிட்டுக்கொள்ள இலங்கை மற்றும் சர்வதேச அறிஞர்களுக்கு ஒரு சிறந்த தளம் அமைக்கிறது.

இச்சஞ்சிகையின் அனைத்து கட்டுரைகளும் உயர்தர ஆராய்ச்சியின் விளைவாக எழுதப்பட்டுள்ளதுடன் ஆய்வு மற்றும் சோதனைப் பணிகளுக்கு அடித்தளம் அமைக்கும் வகையில் புதிய நுண்ணறிவுகளையும் வழங்குகிறது என பல்கலைக்கழக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இந்த இதழ் எதிர்கால ஆராய்ச்சியின் மேம்பாட்டிற்காக இத்துறையில் உள்ள மேலதிக அறிவைப்பெற உதவியாக அமையும் என கருதப்படுகிறது. மேலும் அனைத்து கட்டுரைககளும் இலங்கை மற்றும் சர்வதேச துறைசார் வல்லுநர்கள் குழுவின் மூன்று (3) மதிப்பாய்வாளர்கள் மூலம் மதிப்பாய்வு செய்யப்படுது குறிப்பிடத்தக்கது.

இச்சஞ்சிகைக்கு சிறந்த கட்டுரைகள் மாத்திரமே கணனி பீடத்தினால் தெரிவு செய்யப்படுவதாக பல்கலைக்கழகம் மேலும் தெரிவிக்கிறது.