--> -->

இலங்கையிலுள்ள 'சேவ் தி சைல்ட்' பிரதிநிதிகள் தேசிய ஆட்கடத்தல் தடுப்பு பணிக்குழுவுடன் (NAHTTF) சந்திப்பு

ஆகஸ்ட் 18, 2022

ஆட்கடத்தளுக்கு எதிரான நடவடிக்கைகளுக்கு அதிக தாக்கத்தை உருவாக்குவதற்கும் நோக்கத்துடன் அரசு மற்றும் சிவில் சமூக அமைப்புகளின் திறனை வலுப்படுத்தும் திட்டத்தின் கீழ் நடவடிக்கைகள் குறித்து ஆராய்வதற்காக 'சேவ் தி சைல்ட்' அமைப்பின் பிரதிநிதிகள் பங்கேற்புடன் தேசிய ஆட்கடத்தல் தடுப்பு பணிக்குழுவின் (NAHTTF) கூட்டம் ஒன்று நேற்று மாலை (ஆகஸ்ட் 17) பாதுகாப்பு அமைச்சில் நடைபெற்றது.

பாதுகாப்புச் செயலாளர் மற்றும் தேசிய ஆட்கடத்தல் தடுப்பு பணிக்குழுவின் (NAHTTF) தலைவர் சார்பாக, தேசிய புலனாய்வுப் பிரதானி மேஜர் ஜெனரல் ருவன் குலதுங்க (ஓய்வு) கூட்டத்திற்கு தலைமை தாங்கினார். திருமதி புத்தினி விதானா - சிரேஷ்ட தொழில்நுட்ப ஆலோசகர் (சிறுவர் பாதுகாப்பு மற்றும் வணிகத்தில் சிறுவர் உரிமைகள்) மற்றும் சுசேத கோபல்லவ- 'சேவ் தி சைல்ட்' அமைப்பின் மூத்த மேலாளர் (கடத்தல் எதிர்ப்பு) ஆகியோரும் இக்கூட்டத்தில் கலந்துக் கொண்டனர்.

ஆட்களை கடத்துவதை (J/TIP) கண்காணிக்க அமெரிக்க வெளியுறவுத்துறை அலுவலகத்தின் நிதியுதவியுடன், இடம்பெயர்வுக்கான சர்வதேச அமைப்பு (IOM) இந்த மூன்றாண்டு திட்டத்தை ஆட்கடத்தல் தடுப்பு பணிக்குழு மற்றும் 'சேவ் தி சைல்ட்' உள்ளிட்ட நான்கு சிவில் சமூக அமைப்புகளின் ஆதரவுடன் செயல்படுத்துகிறது.