பாதுகாப்பு உயர் அதிகாரிகள் ஜனாதிபதியை சந்தித்தனர்!

ஆகஸ்ட் 19, 2022

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்களுக்கும் பாதுகாப்புப் பிரிவின் பிரதானிகளுக்கும் இடையிலான சந்திப்பு இன்று (19) ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றது.

ரணில் விக்ரமசிங்க அவர்கள் ஜனாதிபதியாகவும் முப்படைகளின் தளபதியாகவும் பதவியேற்றதன் பின்னர் மரியாதை நிமித்தம் இந்தச் சந்திப்புகள் இடம்பெற்றன.

பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் கமல் குணரத்ன (ஓய்வு பெற்ற), பாதுகாப்புப் படைகளின் பிரதானி ஜெனரல் சவேந்திர சில்வா, இராணுவத் தளபதி லுதினன் ஜெனரல் விக்கும் லியனகே, கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் நிஷாந்த உலுகேதென்ன, வான்படைத் தளபதி எயார் மார்ஷல் சுதர்சன பத்திரன, சிவில் பாதுகாப்பு திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் மேஜர் ஜெனரல் என்.ஆர். லமாஹேவாகே, இலங்கை கடலோர பாதுகாப்புப் படையின் பணிப்பாளர் ஜெனரல் ரியர் அட்மிரல் அனுர ஏக்கநாயக்க ஆகியோர் ஜனாதிபதியை மரியாதை நிமித்தம் சந்தித்தனர்.

இந்தச் சந்திப்பின்போது ஜனாதிபதி அவர்களுக்கு நினைவுப் பரிசுகளையும் வழங்கிவைத்தனர்.

நன்றி - ஜனாதிபதி ஊடகப் பிரிவு