கிளிநொச்சி மாணவர்கள் மத்தியில் பூப்பந்து விளையாட்டை ஊக்குவிக்கும் இராணுவம்

ஆகஸ்ட் 23, 2022

இலங்கை இராணுவம் (SLA) கிளிநொச்சியில் உள்ள பாடசாலை இளைஞர்களின் பூப்பந்து திறனை மேம்படுத்தும் வகையில் அண்மையில் வட மாகாண விளையாட்டு வளாகத்தில் உள்ள உள்ளக விளையாட்டரங்கில் பூப்பந்து போட்டியை ஏற்பாடு செய்தது.

முல்லைத்தீவு பாதுகாப்பு படைத் தலைமையகம் (SFHQ- MLT) ஏற்பாடு செய்த இப்போட்டியில் கிளிநொச்சி மத்திய கல்லூரி, கிளிநொச்சி இந்து மகா வித்தியாலயம் மற்றும் கிளிநொச்சி புனித தெரேசா வித்தியாலயத்தைச் சேர்ந்த 64 பூப்பந்து வீரர்கள் கலந்துகொண்டனர்.

நிகழ்வின் பரிசளிப்பு விழாவில் முல்லைத்தீவு பாதுகாப்பு படைத் தலைமையக கட்டளை தளபதி மேஜர் ஜெனரல் சஞ்சய வனசிங்க, சிரேஷ்ட இராணுவ அதிகாரிகள், பிராந்திய கல்வி அதிகாரிகள் மற்றும் கிளிநொச்சி விளையாட்டு உத்தியோகத்தர் ஆகியோர் கலந்துகொண்டதாக இராணுவம் தெரிவித்துள்ளது.