கழிவு நீர் அடைப்பை அகற்ற இராணுவம் உதவி

ஆகஸ்ட் 23, 2022

இலங்கை இராணுவம் (SLA) நகர சபை, வீதி அபிவிருத்தி அதிகார சபை மற்றும் ஏனைய ஊழியர்களுடன் இணைந்து அண்மையில் நாவலப்பிட்டி நகரில் கழிவுநீர் வடிகால் அமைப்பில் ஏற்பட்ட அடைப்பை சீர் செய்ய உதவியது.

கம்பளையிலுள்ள இராணுவ அனர்த்த பதிலளிப்பு பயிற்சி மையத்தின் (ACDRT) துருப்பினர் இச்சமூகநல வேலைக்கு தமது சேவைகளை வழங்கியதாக இராணுவ வட்டாரங்கள் தெரிவித்தன.

கழிவுப்பொருட்களால் அடைக்கப்பட்டு மழைநீர் வெளியேற்றம் தடைப்பட்டு அதன் காரணமாக ஹங்ரான் ஓயாவில் உள்ள நீர் இறைத்தல் மற்றும் சுத்திகரிப்பு நிலையத்தின் இயக்கம் பாதிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.