இலங்கை விமானப்படை கட்டுநாயக்க தளத்தில் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திட்டத்தை ஆரம்பிக்கிறது

ஆகஸ்ட் 26, 2022

இலங்கை விமானப்படை கட்டுநாயக்கா தளத்தில் 5kW சூரிய சக்தி அமைப்பை நிறுவி அதன் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திட்டத்தின் முதல் கட்டத்தை உத்தியோகபூர்வமாக அண்மையில் ஆரம்பித்து வைத்தது.

இலங்கை விமானப்படை தளபதி எயார் மார்ஷல் சுதர்ஷன பத்திரனவின் பணிப்புரையின் கீழ் எரிசக்தி நெருக்கடிக்கு தீர்வு காணும் வகையில் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக விமானப்படை வட்டாரங்கள் தெரிவிக்கிறது.

எதிர்கால மின் தேவைகளைப் பூர்த்தி செய்ய மேலும் மேம்பாடுகளுக்கான ஏற்பாடுகளை வைத்து இது அமைக்கப்பட்டுள்ளது என விமானப்படை தெரிவிக்கிறது.

விமானப்படை கட்டுநாயக்கா தளத்தின் கட்டளை தளபதி எயார் கொமடோர் லசித சுமனவீர உட்பட சிரேஷ்ட அதிகாரிகள் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.