--> -->

விமானப்படை மற்றும் கடற்படையினர் தீ அணைப்பு

ஆகஸ்ட் 27, 2022

இலங்கை விமானப்படை (SLAF) மற்றும் இலங்கை கடற்படை (SLN) கெரவலப்பிட்டியவில் உள்ள முத்துராஜவெல சதுப்பு நிலம் மற்றும் வத்தளை, புபுதுகம ஆகிய இடங்களில் ஏட்பட்ட தீயை அணைப்பதற்கு உதவி வழங்கினர்.

கெரவலபிட்டியவில் உள்ள முத்துராஜவெல சதுப்பு நிலத்தில் ஏற்பட்ட பாரிய தீயை அணைப்பதற்காக 980 லிட்டர் கொள்ளலவுடைய பம்பி பக்கெட் பொருத்தப்பட்ட பெல் 412 ஹெலிகாப்டரை நேற்று (ஆகஸ்ட் 27) அனுப்பியதாக விமானப்படை வட்டாரங்கள் தெரிவித்தன.

அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் வேண்டுகோளுகிணங்க விமானப்படைத் தளபதி எயார் மார்ஷல் சுதர்சன பத்திரனவின் அறிவுறுத்தலின் பேரில் விமானப்படை அதன் 4 ஆம் படைப்பிரிவில் இருந்து ஹெலிகாப்டர், தீயணைப்பு வாகனங்கள் மற்றும் தீயணைப்பு வீரர்களைப் இதற்காக அனுப்பியுள்ளது.

இதேவேளை, ஆகஸ்ட் 26 ஆம் திகதி வத்தளை, புபுதுகம சதுப்பு நிலத்திற்கு அருகில் ஏற்பட்ட திடீர் தீயை அணைக்க மூன்று தீயணைப்பு குழுக்களை இலங்கை கடற்படை அனுப்பியது.

இப்பணிக்கு மேற்கு கடற்படை கட்டளையின் இரண்டு தீயணைப்பு இயந்திரங்கள் மற்றும் மூன்று நீர் பவுசர்கள் மற்றும் கெமுனு, ரங்கலா மற்றும் களனி ஆகிய கடற்படை முகாம்களின் மூன்று தீயணைப்பு குழுக்களும் பயன்படுத்தப்பட்டன, என கடற்படை மேலும் கூறியது.