விமானப்படை கலர்ஸ் நைட் நிகழ்வில் பாதுகாப்புச் செயலாளர் பிரதம அதிதியாக கலந்து சிறப்பிப்பு
ஆகஸ்ட் 27, 2022எயார் மார்ஷல் சுதர்ஷன பத்திரனவின் அழைப்பின் பேரில் பாதுகாப்புச் செயலாளர் ஜெனரல் கமல் குணரத்ன நேற்று (ஆகஸ்ட் 27) ரத்மலானை, அத்திடிய, ஈகிள்ஸ் லகூன் பேங்க்வெட் மண்டபத்தில் இடம்பெற்ற இலங்கை விமானப்படை கலர்ஸ் நைட் நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.
2018 முதல் 2021 வரையான காலப்பகுதியில் இலங்கை விமானப்படை விளையாட்டு வீர, வீராங்கனைகளின் விளையாட்டு சாதனைகள், திறமைகள் மற்றும் திறன்களை பாராட்டும் வகையில் இந்த கலர்ஸ் நைட் நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டது.
பாதுகாப்பு அமைச்சின் சேவா வனிதா பிரிவின் தலைவி திருமதி சித்ராணி குணரத்ன, விமானப்படை சேவா வனிதா பிரிவின் தலைவி திருமதி சாமினி பத்திரன, பாதுகாப்பு படைகளின் பிரதம அதிகாரி, விமானப்படை உயர் அதிகாரிகள், விமானப்படை வர்ணமளிப்பு பெற்றவர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் மற்றும் அதிதிகள் ஆகியோர் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்வின் போது உரையாற்றிய பாதுகாப்புச் செயலாளர், விளையாட்டுகள் இராணுவ வாழ்வின் ஓர் அங்கம் என்றும் இது குழுவாக இணைந்து செயல்படுதல், விதிகளைப் பின்பற்றுதல், விடாமுயற்சியுடன் செயற்படுதல் ஆகிய பண்புகளை வளர்த்துக்கொள்வதற்கு வழி வகுப்பதுடன் மிக முக்கியமாக வெற்றி தோல்வியினை ஏற்றுக்கொள்ளும் முக்கிய பண்பினை எமக்கு கற்றுத் தருகிறது எனக் குறிப்பிட்டார்.
மேலும், விளையாட்டுக்கள், தோழமை, போராடும் மனப்பான்மை மற்றும் துன்பங்களை உணர்ந்து கொள்ளும் குணம் ஆகியவற்றை வளர்க்கும் என தெரிவித்ததுடன் விளையாட்டு வீர, வீராங்கனைகள் தங்கள் விளையாட்டில் சிறந்து விளங்க வேண்டும் என்ற அபிலாஷைகளை, முழுமையான அர்ப்பணிப்பு, தொடர்ச்சியான பயிற்சி, செயற்பாடுகள், சிறந்த ஒழுக்கம் மற்றும் மிக முக்கியமாக தனிப்பட்ட தியாகம் என்பன இல்லாமல் அடைய முடியாது என்றும் வலியுறுத்தினார்.
எல்லாவற்றிற்கும் மேலாக, தொற்றுநோய்கள் உட்பட பல்வேறு சவால்களுக்கு மத்தியில் தொடர்ந்து சிறப்பாக செயற்பட்டு, 'விடாமுயற்சியின் மூலம் வெற்றி' என்ற கருப்பொருள் உங்கள் அனைவராலும் முழுமையாக உருவகப்படுத்தப்பட்டுள்ளது என்பதை நிரூபிக்கிறது," என பாதுகாப்பு செயலாளர் தெரிவித்ததுடன் இறுதியில் அந்தந்த விளையாட்டில் பறக்கும் வண்ணங்களுடன் வெற்றியை சுவீகரித்துள்ளீர்கள் எனவும் குறிப்பிட்டார்.
மேலும் அவர், விளையாட்டின் முகாமைத்துவக் குழுக்கள் மற்றும் பயிற்சியாளர்களின் பங்களிப்பை பாராட்டியதுடன், விளையாட்டு அரங்கில் வெற்றிபெறும் சூழலில், குறிப்பிட்ட விளையாட்டு வீரரோ அல்லது விளையாட்டு வீரரோ மட்டும் பெருமையை அடைய முடியாது எனவும் அதன் பின்னால் ஒரு குழு உள்ளது எனவும் எனவே, அந்த நபர்களின் முயற்சிகள் மற்றும் தியாகங்களும் பாராட்டுதலுக்குறியவை எனவும் குறிப்பிட்டார்.
அண்மைய காலங்களில் சிறப்பாக செயல்பட்ட விமானப்படை விளையாட்டு வீரர்களையும் அவர் நினைவு கூர்ந்தார்.
வர்ணப் பெற்றவர்கள் மற்றும் சிறப்பு விருது வென்றவர்களின் சிறப்பான செயல்திறனுக்காக வாழ்த்து தெரிவித்த ஜெனரல் குணரத்ன, விளையாட்டுத் திறனை உயர்த்துவதில் அர்ப்பணிப்புடன் செயல்பட்ட விளையாட்டு கவுன்சில் உறுப்பினர்கள் ஒவ்வொருவருக்கும் தனது நன்றியைத் தெரிவித்தார்.
விமானப்படைக்கும் எம் தாய்நாட்டிற்கும் பெருமை சேர்க்கும் வகையில் அடுத்த தலைமுறை சிறந்த விளையாட்டு வீர வீராங்கனைகளை உருவாக்கும் முயற்சிகள் தொடரும் என தான் எதிபார்ப்பதாகவும் பாதுகாப்பு செயலாளர் தெரிவித்தார்.