கடற்படையினரால் காயமுற்ற சிப்பாய் ஒருவர் கரைக்கு கொண்டுவரப்பட்டார்

ஆகஸ்ட் 27, 2019

துறைமுக கட்டுப்பாட்டு மையத்தினால் விடுக்கப்பட்ட வேண்டுகோளுக்கிணங்க விரைந்து செயற்பட்ட இலங்கை கடற்படையினர், எண்ணெய்க்கப்பலில் காயமுற்ற கடற்படை சிப்பாய் ஒருவரை அதிவேக தாக்குதல் படகின்மூலம் நேற்று மாலை (ஆகஸ்ட், 26) கரைக்கு கொண்டுவந்துள்ளனர். குறித்த சிப்பாய் இக்கப்பலில் வேலைசெய்து கொண்டிருக்கும்போது கயமுற்றதாக கடற்படை தகவல்கள் தெரிவிக்கின்றன.

கொழும்பு கலங்கரை விளக்கத்திலிருந்து 12.5 கடல் மைல்களுக்கு ஆப்பால் குறித்த எண்ணெய் கப்பலை அடைந்த கடற்படை அதிவேக தாக்குதல் படகின்மூலம் பாதுகாப்பாக குறித்த சிப்பாய் அழைத்து வரப்பட்டார். கொழும்பு துறைமுகத்திற்கு பாதுகாப்பாக அழைத்து வரப்பட்ட காயமுற்ற சிப்பாய் மேலதிக சிகிச்சைக்காக கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு அனுப்பிவைக்கப்பட்டார்.