--> -->

நன்கொடையாளர்களின் ஆதரவுடன் இராணுவத்தால் நிர்மாணிக்கப்பட்ட புதிய வீடு யாழ்ப்பாண முன்னாள் போராளிகளுக்கு அன்பளிப்பு

ஆகஸ்ட் 28, 2022

இலங்கை இராணுவத்தினரால்,  திரு. விஷ் நடராஜா அவர்களின் அனுசரணையுடன்  யாழ்ப்பாணம் புலோலியில் நிர்மாணிக்கப்பட்ட புதிய வீடொன்று முன்னாள் போராளி குடும்பம் ஒன்றிற்கு இராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் விக்கும் லியனகே அவர்கள் கலந்துக்கொண்ட நிகழ்வொன்றின் போது நேற்று (ஆகஸ்ட் 27) கையளிக்கப்பட்டது.

55 ஆவது படைப்பிரிவின் கீழ் உள்ள 551 ஆவது படையணியின் 16 ஆவது இலங்கை இலகு காலாட்படையின் துருப்புக்கள் இந்த வீட்டை நிர்மாணிப்பதற்கான தொழில்நுட்ப, பொறியியல் மற்றும் மனிதவள உதவிகளை வழங்கியதாக இராணுவ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

புதிய வீட்டின் சாவிபயனாளிகளான திருமதி தங்கராசா தர்மராணி, அவரது கணவர் திரு குமாரகுலசிங்கம் பிரசாந்தன் மற்றும் அவர்களது மகன் ஆகியோருக்கு கையளிக்கப்பட்டதுடன் அவர்களுக்கு ஒரு பண நன்கொடையும் வழங்கப்பட்டது.

2009 ஆம் ஆண்டுக்கு முன்னர் விடுதலைப் புலி பயங்கரவாத அமைப்பில் போராளிகளாகவிருந்த இக்கணவன் மனைவி இருவரும் பலத்த காயங்களுக்கு உள்ளாகி, சரணடைந்து மகுணமடைந்த பின்னர் புனர்வாழ்வளிக்கப்பட்டனர். இவர்  தற்போது, கான்கிரீட் உற்பத்தி தொழிச்சாலை ஒன்றில் உதவியாளராக பணிபுரிந்து வருகிறார்.

இந்நிகழ்வின் போது, அவுஸ்திரேலியாவில் வாழும் கலாநிதி பியசேன கமகேவின் அனுசரணையின் கீழ், அண்மைய புலமைப்பரிசில் பரீட்சையில் சிறந்த பெறுபேறுகளை பெற்ற சில  மாணவர்களுக்கு மாதாந்தம் ரூபா 5000/= பெறுமதியான புலமைப்பரிசில்களும்    வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.