சீரற்ற காலநிலை: அனர்தங்களுக்கும் முகம் கொடுக்கும் வகையில் விமானப் படை தயார் நிலையில்

ஆகஸ்ட் 31, 2022

நாட்டில் தற்போது நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக ஏற்படக்கூடிய எந்தவொரு அனர்தங்களுக்கும் முகம் கொடுக்கும் வகையிலும் பாதிக்கப்படும் மக்களை பாதுகாப்பாக மீட்டெடுக்கும் மற்றும் தேடுதல் நடவடிக்கைகளை மேற்கொள்ளும் வகையிலும் இலங்கை விமானப் படை தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.

இலங்கை விமானப் படையின் விமானங்கள் மற்றும் விமானப் படைவீரர்களையும் தயார் நிலையில் வைப்பதற்கு தேவையான சகல அறிவுறுத்தல்களையும் விமானப் படைத் தளபதி எயார் மார்ஷல் சுதர்ஷன பத்திரன வழங்கியுள்ளார்.

விமானப் படையின் நடவடிக்கைகள் தொடர்பாக விளக்கமளித்த விமானப் படையின் பேச்சாளர் குரூப் கெப்டன் துஷான் விஜேசிங்க :-

இலங்கைக்கு அன்மித்த பிரதேசத்தில் ஏற்பட்டுள்ள தாழமுக்கம் காரணமாக காணப்படும் சீரற்ற கலநிலையினால் நாட்டின் பல பகுதிகளில் தொடர் மழை பெய்து வரும் நிலையில் வெள்ளம், மண்சரிவு போன்ற அனர்த்தங்கள் ஏற்பட வாய்புக்கள் உள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவித்துள்ளது.

இதனால் ஏற்படும் எந்தவொரு அனர்தங்களுக்கும் முகம் கொடுக்கும் வகையிலும் பாதிக்கப்படும் மக்களை பாதுகாப்பாக மீட்டெடுக்கும் மற்றும் தேடுதல் நடவடிக்கைகளை மேற்கொள்ளும் வகையிலும் அனர்த்தங்களிலிருந்து பாதுகாக்கும் வகையிலேயே இலங்கை விமானப் படை தயார் நிலையில் வைக்க விமானப் படைத் தளபதி அறிவுறுத்தியுள்ளார்.

இதேவேளை, திடீர் காலநிலை மாற்றம் காரணமாக எதிர்காலத்தில் ஏற்படும் மாற்றங்கள், வெள்ளப் பொருக்கு, மணிசரிவு போன்ற அனர்த்தங்கள் தொடர்பில் கண்காணிக்க விமானப் படையின் கண்காணிப்பு விமானங்கள் ஈடுப்படுத்தப்பட்டுள்ள அதேசமயம், பாதிக்கப்பட்டவர்களை பாதுகாப்பாக மீட்டெடுக்கும் மற்றும் நிவாரண உதவிகளை வழங்கும் நடவடிக்கைகளில் ஈடுப்படுத்த விமானப் படையின் சிறப்பு பயிற்சி பெற்ற வீரர்களும் ஹெலிகொப்டர்களும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.