--> -->

காலநிலை அவதானம் -கனமழை எச்சரிக்கை

ஆகஸ்ட் 31, 2022

வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள வானிலை எச்சரிக்கையில், கனமழை காரணமாக குறிப்பாக மண்சரிவு அபாயம் உள்ள மலைப்பிரதேசங்களில் மற்றும் ஆற்றுப் படுகைகளில் தாழ்வான பகுதிகளில் வசிப்பவர்கள் அவதானமாக இருக்குமாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் சாரதிகளும் மலைப்பாங்கான வீதிகளைப் பயன்படுத்துபவர்களும் அவதானமாக இருக்குமாறு திணைக்களம் கேட்டுக்கொண்டுள்ளது.

மின்னலினால் ஏற்படக்கூடிய சேதங்களைக் குறைப்பதற்கு போதுமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறும் பொது மக்களுக்கு எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

இலங்கையை அண்மித்த பகுதிகளில் தாழமுக்க மண்டல நிலைமை காணப்படுவதாகவும், இதன் காரணமாக மேல், தெற்கு, சப்ரகமுவ, மத்திய மற்றும் ஊவா மாகாணங்களில் சில இடங்களில் 150 மில்லிமீற்றருக்கும் அதிகமான கடும் மழை பெய்யக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏனைய சில இடங்களிலும் சுமார் 100 மில்லிமீற்றர் அளவில் பலத்த மழை பெய்யக்கூடும்.

வளிமண்டலவியல் திணைக்களத்தின் இவ்வெச்சரிக்கை நாளை (செப். 01) காலை 07.00 மணி வரை செல்லுபடியாகும்.