குடா கங்கை பள்ளத்தாக்கு பகுதிகளில் சிறு வெள்ளம் அபாய எச்சரிக்கை

செப்டம்பர் 01, 2022

பாலிந்த நுவர மற்றும் புலத்சிங்கள பிரதேச செயலகப் பிரிவுகளில் அமைந்துள்ள குடா கங்கை பள்ளத்தாக்கின் தாழ்வு பகுதிகளில் சிறிய வெள்ள நிலைமை ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து நீர்ப்பாசனத் திணைக்களம் பொதுமக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ளது.

நேற்று மாலை (ஆகஸ்ட் 31) நிலவரப்படி, களு கங்கை ஆற்றின் குடா கங்கை துணைப் படுகையின் மேல்நிலை நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் கணிசமான மழை பதிவாகியுள்ளது.

குடா கங்கையில் உள்ள நீரியல் நிலையங்களின் தற்போதைய மழை நிலை மற்றும் ஆற்று நீர் நிலைகளை ஆராய்ந்து, அப்பகுதிகளில் வசிப்பவர்களும், அவ்வழியாக செல்லும் வாகன சாரதிகளும் இது தொடர்பில் அதிக கவனம் செலுத்துமாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

அனர்த்த முகாமைத்துவ அதிகாரிகளுக்கு போதிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் நீர்ப்பாசனத் திணைக்களம் கோரியுள்ளது.