2019.07. 12 ஆம் திகதியன்று சிரச தொலைக்காட்சியில் தெரிவித்த செய்தி குறித்த தெளிவு

ஜூலை 13, 2019

2019.07.12 ஆம் திகதியன்று இரவு 7.00 மணிக்கு சிரச தொலைக்காட்சியில் தெரிவித்த செய்தி தொடர்பாக.

2019.07.12 ஆம் திகதியன்று இரவு 7.00 மணிக்கு சிரச தொலைக்காட்சியில் அறிவிக்கப்பட்ட செய்தியில் அமெரிக்காவின் வெஸ்டேர்ன் குளோபல் எயார்லைன் விமான சேவை நிறுவனத்துக்கு சொந்தமான மக் டொனால்ட் டக்லஸ் ll எனும் விமானம் 2019.07.11 ஆம் திகதியன்று அதிகாலை 0350 மணியளவில் பண்டாரநாயக்க சர்வதேச விமானநிலையத்தை வந்தடைந்ததாக தெரிவிக்கப்பட்டது.

குறித்த தலைப்பின் கீழ் தெரிவித்த செய்தி தொடர்பாக அவதானித்தபோது உண்மைக்கு புறம்பானதாகவும், பொது மக்களை தவறாக வழியில் நடாத்தும் வகையிலும் அமைந்துள்ளமை அவதானிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக சிவில் விமான சேவை அதிகாரசபையிடம் விசாரித்தபோது, பின்வரும் உண்மைகள் தெரியவந்தன.

மக் டொனால்ட் டக்லஸ் ll என்ற விமானமானது ஒரு சரக்கு விமானமெனவும் அது உரிய நடைமுறைகளைப் பின்பற்றி முன் அனுமதியுடனே இலங்கையை வந்தடைந்ததாகவும், இவ்விமானத்தில் வருகை தந்த குழுவினர் தொடர்பான விவரங்கள் உட்பட அனைத்து தகவல்களும் சிவில் விமான சேவை அதிகாரிகளுக்கு வழங்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இதேவேளை குறித்த விமானம் அதன் திட்டமிட்ட பயண மார்க்கத்தின் பிரகாரம் மீள்நிரப்பு நோக்கங்களுக்காக பண்டாரநாயக்க சர்வதேச விமானநிலையத்தை வந்தடைந்ததாகவும், பின்னர் அங்கிருந்து 2019.07. 13 ஆம் திகதி காலை 0737 மணிக்கு புஜைரா சர்வதேச விமான நிலையம் நோக்கி புறப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.