கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் சட்ட சஞ்சிகைக்கு சர்வதேச அங்கீகாரம்

செப்டம்பர் 08, 2022

ஜெனரல் சர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் (KDU) ‘சட்ட சஞ்சிகை’ யின் 02 ஆம் தொகுதி இம்மாதம் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது என்று அப்பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.

சட்ட பீடத்தின் அரையாண்டு வெளியீடான இந்த சஞ்சிகையின் 01 ஆம் தொகுதி  வெளியீடு I கடந்த ஆண்டு மே மாதம் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் மேஜர் ஜெனரல் மிலிந்த பீரிஸ் அவர்களால் வெளியிடப்பட்டது.

ஹெய்ன்ஒன்லைன் (HeinOnline) தரவுத்தளத்தில் இந்த ஆண்டு ஆகஸ்ட் 30 முதல் இச்சஞ்சிகை அறிவு சார்ந்த வெளியீடாக அங்கீகரிக்கப்பட்டுள்ளதாக பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.

ஹெய்ன்ஒன்லைன் என்பது உலகளாவிய கல்வியாளர்கள், சட்ட மற்றும் ஏனைய நிறுவனங்கள் மற்றும் சட்ட சமூகத்திற்கான அதிகாரப்பூர்வ சட்ட ஆதாரங்களைக் கொண்ட முதன்மையான சர்வதேச ஆன்லைன் ஆராய்ச்சி தளமாகும்.

பல்கலைக்கழகத்தின் சட்ட சஞ்சிகை குறுகிய காலத்திற்குள் சர்வதேச அளவில் அட்டவணைப்படுத்தப்பட்டுள்ளதுடன் ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் சர்வதேச அளவில் அட்டவணைப்படுத்தப்பட்ட முதல் சஞ்சிகையும் ஆகும் என்பது குறிப்பிடத்தக்கது.