மன்னார் களப்பு இராணுவப் படையினரின் பங்களிப்புடன் சுத்தம் செய்யப்பட்டது

செப்டம்பர் 09, 2022

இலங்கை இராணுவத்தின் சமூக மேம்பாட்டு திட்டத்தின் கீழ் அண்மையில் சிரமதான நிகழ்ச்சி ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.  இதன் போது தள்ளடி முதல் மன்னார் பாலம் வரையான களப்பு பிரதேசம் இராணுவ துருப்பினரால் சுத்தம் செய்யப்பட்டது.

இராணுவ தகவல்களுக்கமைய 54 ஆவது படைப் பிரிவின் 12 ஆம் ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில் பிரதேசத்தில் டெங்கு நோய் தொற்றைத் தடுப்பதை நோக்கமாகக் கொண்டு இத்திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

சிரேஷ்ட இராணுவ அதிகாரிகள்,  துருப்பினர் மற்றும் மன்னார் மாநகர சபையின் பணியாளர்கள் இந்நிகழ்வில் கலந்துக்கொண்டனர்.