கடுவெல பிரதேசத்தில் இராணுவப் படையினர் வெல்ல நிவாரண நடவடிக்கைகளில்

செப்டம்பர் 09, 2022

களனி கங்கை பெருக்கெடுத்து கடுவெல, போமிரிய பிரதேசத்தில் ஏற்படவிருந்த பாரிய வெள்ள அனர்த்தம் இலங்கை இராணுவ துருப்பினரின் துரித நடவடிக்யினால் தடுக்கப்பட்டது. ஆற்றின் இருகரைகளலும் நூற்றுக்கணக்கான மணல் மூட்டைகளை அடுக்கி தாழ்வு பகுதிகளில் வெள்ளம் ஏற்படுவதை தடுக்க நடவடிக்கை எடுத்தனர்.      

மேற்கு பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் தீபால் புஸ்ஸல்ல அவர்களின் வழிகாட்டுதலின் கீழ் மேற்கு பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் 2 வது இலங்கை காலாட்படை (SLLI)  படையினர் இந்த நடவடிக்கைகளை மேற்கொண்டதாக இராணுவ  வட்டாரங்கள் தெரிவித்தன.

இதற்கிடையில், 8 இலங்கை காலாட்படை துருப்புக்கள், இராணுவ படகுகள் மற்றும் பேருந்துகள் பயன்படுத்தி, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மல்வானை பிரதேசத மாணவர்களை பாடசாலைகளுக்குச் செல்ல உதவி செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.