புல்மோட்டையில் தேவையுடையோருக்கு மூக்குக்கண்ணாடி கடற்படையின் ஆதரவுடன் வழங்கிவைப்பு

செப்டம்பர் 13, 2022

இலங்கை கடற்படையினரால் அண்மையில் புல்மோட்டை ஆதார வைத்தியசாலையில் ஏற்பாடு செய்யப்பட்ட ஒரு நிகழ்ச்சின் போது புல்மோட்டையில் வசிக்கும் 125க்கும் மேற்பட்ட பார்வைக் குறைபாடுள்ளவர்களுக்கு மூக்குக்கண்ணாடிகள் வழங்கப்பட்டன.

கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் நிஷாந்த உலுகேதென்ன அவர்களின் பணிப்புரைக்கு அமைவாக, கடற்படை சமூகப் பொறுப்புணர்வு முயற்சி திட்டத்தின் கீழ், தனியார் நன்கொடையாளர் ஒருவரின் அனுசரணையுடன் மேற்கொள்ளப்பட்ட இந்நிகழ்ச்சிக்கு கடற்படை ஆதரவளித்தது.

கிழக்கு கடற்படை கட்டளையின் மருத்துவ பணியாளர்கள், பிரதேசத்திலுள்ள கடற்படை முகாம்கள் மற்றும் புல்மோட்டை ஆதார வைத்தியசாலை ஊழியர்கள் இணைந்து மூக்குக்கண்ணாடிகளை விநியோகித்தனர்.

மேலும் இந்நிகழ்விற்கு வருகைதந்தவர்களுக்காக ஆரோக்கியமான வாழ்க்கை முறையின் முக்கியத்துவம் தொடர்பில் விழிப்புணர்வு உபதேசம் ஒன்றும் அளிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

கிழக்கு கடற்படை தளபதி ரியர் அட்மிரல் ஜயந்த குலரத்ன அவர்களின் மேற்பார்வையில் இந்த நிகழ்ச்சி நடைபெற்றது.