ஹம்பாந்தோட்டை வைத்தியசாலைக்கு படைவீரர்கள் இரத்த தானம் அளிப்பு

செப்டம்பர் 14, 2022

மத்திய பாதுகாப்புப் படை தலைமையகத்தின் கீழ் உள்ள படைவீரர்களினால் அண்மையில் இரத்த தானம் வழங்கும் நிகழ்வு முன்னெடுக்கப்பட்டது. வைத்தியசாலை அதிகாரிகளினால் விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைவாக, ஹம்பாந்தோட்டை மாவட்ட வைத்தியசாலையின் இரத்த வங்கிக்கே இவ்வாறு இரத்ததானம் அளிக்கப்பட்டது.

இராணுவத்தின் 12வது பிரிவு மற்றும் கொழும்பு றோயல் கல்லூரி செஞ்சிலுவைச் சங்கம் ஆகியன இணைந்து ஏற்பாடு செய்த இந்த இரத்ததான நிகழ்வில் 122 ஆவது படையணி மற்றும் 12வது படைப் பிரிவின் கட்டளையின் கீழ் சுமார் 100 படைவீரர்கள் அடங்கிய குழுவொன்று கலந்து கொண்டு இரத்த தானம் வழங்கியதாக இராணுவ தகவல்கள் தெரிவிக்கின்றன.