அங்கவீனமுற்ற போர் வீரர்களை புதிய பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பார்வையிட்டார்

செப்டம்பர் 14, 2022

பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் கொளரவ பிரமித பண்டார தென்னகோன் அவர்கள்; இன்று (செப்.14) கோட்டே, ஸ்ரீ ஜயவர்தனபுரவிலுள்ள தேசிய போர் வீரர் நினைவுதூபிக்கு மலரஞ்சலி செலுத்தி தேசத்தின் போர் வீரர்களுக்கு மரியாதை செலுத்தினார்.

இதேவேளை, தனது முதலாவது உத்தியோகபூர்வ விஜயமாக இராஜாங்க அமைச்சர் தென்னகோன், அத்திடியவில் அமைந்துள்ள  ‘மிஹிந்த செத் மெதுர’ வில் பராமரிக்கப்பட்டு வரும் அங்கவீனமுற்ற போர் வீரர்களை பார்வையிட்டார்.

‘மிஹிந்த செத் மெதுர’ என்பது பயங்கரவாத யுத்தத்தின் போது காயமடைந்து தம் வாழ்நாள் முழுவதும் தொடர்ச்சியான கவனிப்பு, மற்றும் உதவி தேவைப்படும் கடுமையான அங்கவீகமுற்ற போர்வீரர்களை பராமரிக்கும் இல்லமாகும்.

இராஜாங்க அமைச்சர் தென்னகோன் புதிய பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர கொழும்பிலுள்ள அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலைய வளாகத்தில் அமைந்துள்ள பாதுகாப்பு இராஜாங்க அமைச்சில் வைத்து நேற்று முன்தினம் தனது கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டமை குறிப்பிடத்தக்கது.

மிஹிந்த செத் மெதுர விஜயத்தின் போது இராணுவத்தின் பிரதிப் பிரதம அதிகாரி மேஜர் ஜெனரல் சன்ன வீரசூரிய உட்பட சிரேஷ்ட இராணுவ அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டனர்.