திருகோணமலையில் ‘’பவளப்பாறைகளை அடையாளம் காணுதல் மற்றும் பாறைகளை மறுசீரமைத்தல்’’ தொடர்பான செயலமர்வு
செப்டம்பர் 18, 2022கடற்படை நீர்மூழ்கி வீரர்களின் நோக்கத்தை விரிவுபடுத்தும் நோக்கில் ‘’பவளப்பாறைகளை அடையாளம் காணுதல் மற்றும் பாறைகளை மறுசீரமைத்தல்’’ தொடர்பான செயலமர்வு அண்மையில் திருகோணமலை கடற்படை கப்பல்துறைமுகத்தில் வெற்றிகரமாக நடைபெற்றது.
நடைமுறை மற்றும் கோட்பாட்டு அம்சங்களை உள்ளடக்கிய இந்த பட்டறை அனுபவமிக்க கடல் உயிரியலாளர்கள் மற்றும் பவள மறுசீரமைப்பு நிபுணர்களால் நடத்தப்பட்டது. கடல் வள பாதுகாப்பு சங்கம் மற்றும் புளூ ரிசோர்ஸ் டிரஸ்ட் ஆகியவற்றின் பங்களிப்புடன் டோக்கியோ சீமெந்து கம்பனி இந்த நிகழ்வை ஏற்பாடு செய்திருந்தது.
பாறைகளpன் மறுசீரமைப்பு மற்றும் பின் பராமரிப்பு நடைமுறைகள் தொடர்பான நடைமுறை செயலமர்வுகள் கடற்படை கடல்விரிகுடாவின் நீருக்கடியிலான பகுதியில் நடத்தப்பட்டன.
கடல் சூழலின் பல்லுயிர் பெருக்கத்தைப் பாதுகாப்பதில் பவளச் சூழல் அமைப்பு பெரும் பங்களிப்பைச் செய்கிறது. இயற்கையpன் காரணங்களாலும் மனித நடவடிக்கைகளாலும் இந்த விலைமதிப்பற்ற பவள சுற்றுச்சூழலுக்கு ஏற்படும் சேதத்தை குறைப்பதற்காக இலங்கை கடற்படையானது இத் திட்டத்திற்காக பல்வேறு முயற்சிகளை ஆரம்பித்துள்ளது. அதன் கீழ், கடற்படையினர் செயற்கை கொங்கிரீட் பாறைகளை உருவாக்கி, அவற்றில் பவளப்பாறைகளை வளர்த்து, மீன்களின் இனப்பெருக்க தளங்களை வழங்குவதன் மூலம் பவள சுற்றுச்சூழலை மீட்டெடுக்கவும் பாதுகாக்கவும் எதிர்பார்க்கப்படுகிறது.
கடற்படையின் பவளப்பாறைப் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ், செயற்கைக் கொங்கிரீட் திட்டுகளில் முன்னர் வைக்கப்பட்ட பவளப்பாறைகள் தற்போது வெற்றிகரமாக வளர்ந்து வருகின்றன. எதிர்காலத்தில், உள்ளூர் மற்றும் வெளிநாட்டு நீர்மூழ்குவோர் அந்த தளங்களில் பொழுதுபோக்கு நீர்மூழ்கில் ஈடுபடுவதற்கான வாய்ப்புகள் ஏற்படுத்திகொடுப்பதுடன் மேலும் இது சுற்றுலாத் துறையை மேம்படுத்துவதற்கு ஒரு பெரிய ஊக்கமாகவும் இருக்கும்.
இலங்கை கடற்படையின் நீர்மூழ்கி பிரிவைச் சேர்ந்த பத்து (10) அதிகாரிகள் மற்றும் நாற்பது (40) மாலுமிகள் இந்த செயலமர்வில் பங்கேற்றனர்.