சாம்பிய பாதுகாப்பு ஆலோசகர் பாதுகாப்பு செயலாளரருடன் சந்திப்பு

ஆகஸ்ட் 27, 2019

புதுடில்லியை தளமாக கொண்ட சாம்பிய உயர்ஸ்தானிகராலய பாதுகாப்பு ஆலோசகர் பிரிகேடியர் ஜெனரல் ஸ்டீபன் சிமுசண்டுஅவர்கள் பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் எஸ்எச்எஸ்.கோட்டேகொட (ஓய்வு) டப்டப்வீ ஆர்டப்பீ ஆர்எஸ்பி வீஎஸ்வீ யுஎஸ்பி என்டிசி அவர்களை செவ்வாயன்று (ஆகஸ்ட், 27) சந்தித்தார்.

பாதுகாப்பு அமைச்சில் இடம்பெற்ற இச்சந்திப்பில் பாதுகாப்பு ஆலோசகர் மற்றும் பாதுகாப்பு செயலாளர் ஆகியோருக்கிடையே சிநேகபூர்வ கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது.

மேலும், இச்சந்திப்பினை நினைவுகூறும் வகையில் நினைவுச் சின்னங்களும் பரிமாறிக்கொள்ளப்பட்டன.