கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழக சட்ட பீடம் சர்வதேச தரவரிசைப்படுத்தலில் உயர்வு

செப்டம்பர் 22, 2022

ஜெனரல் சர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் (KDU) சட்ட பீடம், 2022 ஆம் ஆண்டின் 'நிக்கா சட்டக்கல்லூரி தரவரிசைப்படுத்தல்' ல் இலங்கையில் 2 வது இடத்திலும், ஆசியாவில் 25 வது இடத்திலும், உலகில் 83 வது இடத்திலும் இடம் பெற்றுள்ளது.

2011 இல் ஆரம்பிக்கப்பட்டு 12 ஆண்டுகளுக்குள், கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் சட்ட பீடம் உலகின் சிறந்த 100 சட்டப் கல்லூரிகளில் இடம்பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

அமெரிக்காவின் இல்லினாய் பிராந்தியத்தை தளமாகக் கொண்ட டியங்கும் , 'நிக்கா சட்டக்கல்லூரி தரவரிசைப்படுத்தல்' அமைப்பு 1680 க்கும் மேற்பட்ட உலகளாவிய சட்டக் கல்லூரிகளை பகுப்பாய்வு செய்யும் மிகப்பெரிய தரவரிசையில் ஒன்றாகும்.
இத்தரவரிசையை தீர்மானிப்பதற்கான ஒரு முக்கிய அளவுகோல் ‘மூட்டிங்’ போட்டிகளில் பங்கேற்பதாகும்.

இதற்கமைய கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் சட்ட பீடத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் குழு ஜீன்-பிக்டெட் மூட்டிங் போட்டி, ஐசிசி மூட் கோர்ட் போட்டி, நியூரம்பெர்க் மூட் கோர்ட் போட்டி மற்றும் சார்க் சட்ட மூட் உட்பட பல சர்வதேச மூட் டிங் போட்டிகளில் பங்கேற்று வெற்றி பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

2020 ஆம் ஆண்டு முதல், கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் சட்ட பீடத்தால் ‘ஜெனரல் சர் ஜோன் கொத்தலாவல நினைவு மூட் கோர்ட் போட்டி’ என்ற தலைப்பில் ஒரு மூட்டிங் போட்டியும்  அறிமுகப்படுத்தப்பட்டது.