இலங்கை இராணுவ வீரர் கோலூன்றி பாய்தல் போட்டியில் புதிய சாதனை

செப்டம்பர் 22, 2022

இலங்கை இராணுவத்தின் (SLA) தடகள வீரர் ஒருவர் கோலூன்றி பாய்தல் போட்டியில் புதிய இலங்கை சாதனையை நிலைநாட்டியுள்ளார். இராணுவ ஊடக தகவல்களுக்கமைய 2 இலங்கை மின் & இயந்திர பொறியாளர்கள் (SLEME) படையணியின் இராணுவ வீரர் கே.புவிதரன் 2023 ஆசிய தடகளப் போட்டிக்கான தேர்வுகளில் 5 மீ 15 செ.மீ உயரம் பாய்ந்து புதிய இலங்கை சாதனையை படைத்துள்ளார்.

ஆசியப் போட்டிக்கான தெரிவுகள் இம்மாதம் (செப்டம்பர்) 17 முதல் 19 வரை தியகமையில் உள்ள மஹிந்த ராஜபக்ஷ விளையாட்டரங்கில் நடத்தப்பட்டன.

இராணுவ தடகள வீரர் புவிதரன், தேசிய கனிஷ்ட விளையாட்டு விழா மற்றும் தேசிய பாடசாலை விளையாட்டு விழா ஆகியவற்றில் தங்கப் பதக்கம் வென்றுள்ளதுடன் இலங்கை இராணுவத் தொண்டர் படை விளையாட்டுப் போட்டியிலும் தங்கப் பதக்கம் வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.