பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் தேசிய மாணவர் படையணித் தலைமையகத்திற்கு விஜயம்

செப்டம்பர் 23, 2022

பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் கொளரவ பிரமித பண்டார தென்னகோன் அவர்கள் பாமன்கடையிலுள்ள தேசிய மாணவர் படையணியின் தலைமையகத்திற்கு நேற்று (22) விஜயம் செய்தார்.

பாதுகாப்பு இராஜாங்க அமைச்சராக கடமைகளை பொறுப்பேற்ற பின்னர் தேசிய மாணவர் படையணியின் தலைமையகத்திற்கு மேற்கொண்ட முதலாவது விஜயம் இதுவாகும்.

தேசிய மாணவர் படையணிக்கு வருகைதந்த பாதுகாப்பு இராஜாங்க அமைச்சரை மாணவர் படையணியின் பணிப்பாளர் மேஜர் ஜெனரல் பீடபிள்யுவி ஜயசுந்தர (ஓய்வு) வரவேற்றார். இந்த விஜயத்தின் போது தேசிய மாணவர் படையணி தொடர்பாக அமைச்சருக்கு விளக்கமளிக்கப்பட்டது.

அமைச்சர் தனது விஜயத்தின் நினைவாக மரக்கண்டு ஒன்றையும் நட்டிவைத்தார்.