பதில் பாதுகாப்பு அமைச்சராக இராஜாங்க அமைச்சர் பிரமித பண்டார தென்னகோன் நியமிக்கப்பட்டுள்ளார்.

செப்டம்பர் 26, 2022

பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் கௌரவ பிரமித பண்டார தென்னகோன் பதில் பாதுகாப்பு அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு (PMD) தெரிவித்துள்ளது.

பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் உட்பட ஐந்து இராஜாங்க அமைச்சர்கள் பதில் அமைச்சர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். இதன்படி, கெளரவ ஜனாதிபதி அவர்கள் வெளிநாட்டில் இருக்கும் சமயத்தில் குறித்த அமைச்சுக்களின் இராஜாங்க அமைச்சர்களே அந்தந்த அமைச்சுகளுக்குப் பொறுப்பாக பணியாற்றுவார்கள் என ஜனாதிபதி ஊடகப் பிரிவு உறுதிப்படுத்தியுள்ளது.