தேசிய பாதுகாப்பு கற்கைகளுக்கான நிலையத்தின் மாதாந்த பாதுகாப்பு கலந்துரையாடல்
ஆகஸ்ட் 28, 2019இலங்கை தேசிய பாதுகாப்பு கற்கை நிலையத்தின் மற்றுமொரு மாதாந்த பாதுகாப்பு கலந்துரையாடல் நேற்றய தினம் (ஆகஸ்ட், 27) பாதுகாப்பு அமைச்சின் கேட்போர்கூடத்தில் இடம்பெற்றது.
“டிரம்ப் யுகத்தில் அமெரிக்க வெளியுறவுக் கொள்கை” என்ற கருப்பொருளில் விரிவுரை இடம்பெற்றது. இந்நிகழ்வில் பிரதம பேச்சாளராக கலந்து கொண்ட பேராசிரியர் வால்டர் ரஸ்ஸல் மீட் அவர்கள் சொற்பொழிவு நிகழ்த்தினார்.
சொற்பொழிவின் முடிவில், பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் எஸ்எச்எஸ்.கோட்டேகொட (ஓய்வு) டப்டப்வீ ஆர்டப்பீ ஆர்எஸ்பி வீஎஸ்வீ யுஎஸ்பி என்டிசி அவர்களினால் பேராசிரியர் வால்டர் ரஸ்ஸல் மீட் அவர்களுக்கு நினைவுச் சின்னமொன்று வழங்கி வைக்கப்பட்டது.
இந்நிகழ்வில் தேசிய பாதுகாப்பு கற்கை நிலையத்தின் பணிப்பாளர் நாயகம், சிரேஷ்ட இராணுவ அதிகாரிகள், அதிதிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.