இலங்கை இராணுவத்தினறால் கடற்கரையை சுத்தப்படுத்தும் திட்டம் முன்னெடுப்பு.

செப்டம்பர் 26, 2022

சர்வதேச கரையோர சுத்திகரிப்பு தினம் மற்றும் கடல் வளங்கள் பாதுகாப்பு வாரத்தை ஒட்டி இலங்கை இராணுவத்தினறால் அண்மையில் காத்தான்குடி முதல் மட்டக்களப்பு வரையான கடற்கரை பகுதியில் கடற்கரையை சுத்தப்படுத்தும் திட்டம் முன்னெடுக்கப்பட்டது.

கிழக்கின் பாதுகாப்புப் படைத் தலைமையகத்தின் கீழ் உள்ள 11 ஆவது இலங்கை சிங்கப் படைப்பிரிவின் இராணுவீரர்கள் இந்த நிகழ்ச்சியில் இணைந்து கொண்டதாக இராணுவ வட்டாரங்கள் தெரிவித்தன.

இதற்கிடையில், மேற்கு பாதுகாப்புப் படைத் தலைமையகத்தின் 6 வது இலங்கை பீரங்கிப்படை, 8 வது இலங்கை இலகுரக காலாட்படை மற்றும் 2 வது இலங்கை இராணுவ சேவைப் படையின் இராணுவீரர்கள் நீர்கொழும்பு முதல் பொருதொட்டை வரையிலான சுமார் 3 கிலோமீற்றர் தூரம் வரையிலான கரையோரப் பகுதியை சுத்தப்படுத்தியதாக இலங்கை இராணுவ ஊடகம் தெரிவித்துள்ளது.

இந்த திட்டத்தில் அந்தந்த பகுதிகளின் அரச அதிகாரிகள் மற்றும் பொதுமக்களும் படையினருடன் இணைந்து கொண்டனர்.