கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் இணையத்தள ஆலோசனை சேவைகள் பிரிவு ஆரம்பிக்கப்பட்டது.
செப்டம்பர் 27, 2022ஜெனரல் சர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகம் (KDU) அண்மையில் சிரேஷ்ட பேராசிரியர் ஸ்வர்ண பியசிறியின் அவர்களின் தலைமையில் பிரத்தியேக இணையத்தளத்துடன் ஆலோசனை சேவைகள் பிரிவொன்றினை ஆரம்பித்துள்ளது.
தேசிய முக்கியத்துவம் வாய்ந்த திட்டங்கள், சர்வதேச திட்டங்களில் பங்கேற்பது மற்றும் தொழில்துறைக்கு சேவை செய்வது ஆகியவை இந்த முயற்சியின் முக்கிய நோக்கங்களாக உள்ளன என்று கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழக வட்டாரங்கள் சுட்டிக்காட்டுவதுடன், இந்த பல்கலைக்கழக நிர்வாகக் குழுவின் அங்கீகாரத்தைத் தொடர்ந்து, கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் தொழில் சார்ந்த துறையினர் நாட்டில் சேவையாற்றும் அந்தந்தத் துறைகளின் நிபுணத்துவம் பெற்றவர்களுடன் முறையாக ஒத்துழைக்க இது வழிவகுக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் பல்வேறு துறைகளில் உள்ள நிபுணர்களைப் பயன்படுத்தி, தேசிய மற்றும் சர்வதேசத் திட்டங்களுக்கும், நாட்டின் தொழில்துறைத் துறைக்கும் ஊக்கமளிக்கும் திறன் மற்றும் தேவையான வலிமையை வழங்குவதே இதன் நோக்கமாகும்.
இந்த புதிய பிரிவை நிறுவும் விழாவில் பிரதம அதிதியாக பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் மேஜர் ஜெனரல் மிலிந்த பீரிஸ் கலந்து கொண்டு அதன் இணையத்தளத்தையும் ஆரம்பித்து வைத்தார்.
இந்த அமர்வின் போது பல்கலைக்கழக ஆலோசனை சேவைகள் மற்றும் அதன் செயல்பாடுகள் உட்பட அதன் பொறுப்புகள் குறித்தும் சிரேஷ்ட பேராசிரியர் பியசிறி விளக்கினார். மேலும், உபவேந்தர் தனது உரையின் போது இந்த பிரிவின் மூலம் எதிர்பார்க்கப்படும் பங்களிப்பு மற்றும் ஒட்டுமொத்த நாட்டிற்கும் பல்கலைக்கழகத்திற்குமான அதன் முக்கியத்துவம் குறித்தும் விபரித்தார்.