இராணுவத் தளபதி பதில் பாதுகாப்பு அமைச்சருடன் சந்திப்பு

செப்டம்பர் 29, 2022

இலங்கை இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் விக்கும் லியனகே பதில் பாதுகாப்பு அமைச்சர் கௌரவ பிரமித்த பண்டார தென்னகோன் அவர்களை சந்தித்தார்.

கொழும்பிலுள்ள அனர்த்த முகாமைத்துவ நிலைய வளாகத்தில் அமைந்துள்ள பாதுகாப்பு இராஜாங்க அமைச்சில் இந்த சந்திப்பு இன்று (செப். 29) இடம்பெற்றது.

பாதுகாப்பு இராஜாங்க அமைச்சுக்கு வருகை தந்த இராணுவ தளபதியை பதில் பாதுகாப்பு அமைச்சர் வரவேற்றார்.

இச்சந்திப்பின் போது இருவருக்குமிடையில் பரஸ்பர முக்கியத்துவம் வாய்ந்த விடயங்கள் தொடர்பில் சுமுகமான கலந்துரையாடல் இடம்பெற்றது.

இதேவேளை, புதிய பாதுகாப்பு இராஜாங்க அமைச்சராக பதவி ஏற்றமைக்காக இலங்கை இராணுவத் தளபதி அமைச்சருக்கு தமது வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்தனர்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அவர்கள் உத்தியோகபூர்வமாக வெளிநாட்டுக்கான விஜயத்தை மேற்கொண்டுள்ள மையினால் இராஜாங்க அமைச்சர் தென்னகோன் அவர்கள் பதில் பாதுகாப்பு அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இதேவேளை, இன்றைய தினம் அமைச்சில் நடைபெற்ற இந்ந சந்திப்பினை நினைவுகூரும் வகையில் அமைச்சருக்கு நினைவுச் சின்னங்கள் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.