கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் பளு தூக்கும் குழு ஒட்டுமொத்த ஆண்கள் சாம்பியன் பட்டத்தை சுவீகரிப்பு

ஆகஸ்ட் 28, 2019

ஜெனரல் சேர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் பளு தூக்கும் குழு “அகில இலங்கை திறந்த பளு தூக்கும்போட்டி -2019” இல் ஒட்டுமொத்த ஆண்கள் சாம்பியன் பட்டத்தை தம் வசப்படுத்தியுள்ளதாக கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழக தகவல்கள் தெரிவிக்கின்றன. குறித்த இப்போட்டி இம்மாதம் 11 மற்றும் 12 ஆம் திகதிகளில் பண்டராகம மைத்ரி அரங்கில் நடைபெற்றது.

வாத்துவ சக்தி விளையாட்டுக் கழகத்தின் ஏற்பாட்டில், இலங்கை பளு தூக்கும் அமையத்தினால் நடாத்தப்பட்ட இப் போட்டியில் 150 க்கும் மேற்பட்ட போட்டியாளர்கள் கலந்து கொண்டனர்.

ஆண்களுக்கான போட்டி நிகழ்வுகள் 59 கிலோ, 66 கிலோ, 74 கிலோ, 83 கிலோ, 93 கிலோ, 105 கிலோ, 120 கிலோ மற்றும் 120 கிலோ கிராம் எடைக்கு உட்பட்ட பிரிவுகளின் கீழ் நடைபெற்றது. ஒட்டுமொத்த ஆண்கள் சாம்பியன்ஷிப் பட்டத்தை சுவீகரித்துக்கொண்ட கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் பளு தூக்கும் அணியினர் இரண்டு தங்கம், 1 வெள்ளி மற்றும் 2 வெண்கல பதக்கம் ஆகியவற்றை பெற்றுக்கொண்டது.