புதிய மூன்று மாடி சங்கவாச கட்டிடம் மகா சங்கத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது

ஒக்டோபர் 10, 2022

வரலாற்றுச் சிறப்புமிக்க ஒலபதுவ ரஜ மகா விகாரையில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட மூன்று மாடிகளைக் கொண்ட சங்கவாசக் கட்டிடம் இன்று (அக்டோபர் 10) முற்பகல் பிரதமர் கௌரவ தினேஷ் குணவர்தன அவர்களின் தலைமையில் இடம்பெற்ற சமய நிகழ்வின் போது திறந்து வைக்கப்பட்டு மகா சங்கத்தினருக்கு கையளிக்கப்பட்டது.

இந்த நிகழ்வில் பாதுகாப்பு செயலாளர் கமல் குணரத்ன மற்றும் கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் நிஷாந்த உலுகேதென்ன ஆகியோர் கலந்துகொண்டனர்.

புத்த சாசன மத மற்றும் கலாச்சார அலுவல்கள் அமைச்சு மற்றும் பொரலஸ்கமுவ அக்வோரா லங்கா பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் நிஷாந்த திலகரத்ன ஆகியோரின் நிதிப் பங்களிப்பில் இலங்கை கடற்படையினர் இந்த மூன்று மாடிகளைக் கொண்ட கட்டிடத்தை நிர்மாணித்துள்ளனர்.

கௌரவ பிரதமர் அவர்களினால் ஒலபொடுவ ரஜமஹா விகாரை மற்றும் தலகல விபாசனா தியான நிலையத்தின் பிரதான பீடாதிபதி, சாஸ்த்ரவேதி பண்டித் உடுவே ஹேமலோக பிரதம மஹாநாயகர் தேரரிடம் மூன்று மாடிகளைக் கொண்ட சங்கவாச கட்டிடத்தை திறந்து வைத்தமைக்கான ‘சன்னஸ் பத்ரா’ சான்றிதழ் வழங்கிவைக்கப்பட்டது.

இந்த சமய வைபவத்தில் பெருந்திரளான மகாசங்கத்தினர் கலந்துகொண்டதுடன் வண. வரகாகொட தம்மசித்தி ஸ்ரீ பஞ்சாநந்த ஞானரத்ன தேரர், பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் முக்கியஸ்தர்ளும் கலந்து கொண்டனர்.